
கழிவறை குழியில் விழுந்து பெண் மரணம்
கொழும்பு ஹோமாகம பகுதியில் பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்து பெண் உயிரிழந்துள்ளார்.
பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண்ணே இதன் போது உயிரிழந்துள்ளார்.
தனது மகளின் இல்லத்தில் வசித்து வந்த குறித்த பெண் 8 அடி ஆழமான பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்துள்ளார். பின்னர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
