சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரிக்கு முன்பாக வருகைதரு விரிவுரையாளர்கள் போராட்டம்

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரிக்கு முன்பாக  வருகைதரு விரிவுரையாளர்கள் இருவர் இன்று திங்கட்கிழமை அமைதியான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நப்றீஸ் மற்றும் வசீம் ஆகிய இருவரும்  தங்களுக்கு நடந்த அநீதிக்கு நீதிகேட்டு உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த இரண்டு இருவரும்  சம்மாந்துறை தொழிலநுட்ப கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளர்களாக கடந்த 4 வருடங்களாக கடமையாற்றி வந்த நிலையில் தற்போது கல்லூரிக்கு புதிதாக வந்துள்ள அதிபர் இவர்கள் இருவரையும் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களை பழிவாங்க வேண்டுமென்றே புதிய விரிவுரையாளர்களை நியமித்துவிட்டு தங்களை பணிநீக்கம் செய்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் தெரிவிக்கின்றனர்.