
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல் : பலர் காயம்
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது பத்து கைதிகளும் ஒரு இராணுவ சிப்பாயும் காயமடைந்துள்ளனர்.
மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறைகள் மற்றும் பல இடங்களில் கைதிகள் சேதம் விளைவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் வெலிகந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
