
ஆவா குழுவின் தலைவர் கொழும்பில் கைது ?
யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ஆவா’ கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் ஒருவரை ஊழல் தடுப்புப் பிரிவினர் கல்கிசையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
கல்கிசையில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.
சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுக்கு கடுமையான அடிமையாக இருந்ததாகவும், கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்த 01 கிராம் மற்றும் 300 மில்லிகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
