திருக்கோவில் பிரதேசத்தில் த.ம.வி.பு கட்சியினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு -வீடியோ இணைப்பு

-தம்பிலுவில் நிருபர் ஜே.கே.யதுர்ஷன்-

திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியினால் கல்விக்கு கரம் கொடுப்போம் செயல் திட்டத்தின் நோக்கில் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய கிராமத்தில் வாழும் 100 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வானது தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியின் திருக்கோவில் பிரதேச பொறுப்பாளர் மற்றும் பிரதேச குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் தஜீபரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார்.