மீள ஆரம்பமாகும் பாடசாலைகள்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை 05ஆம் திகதி கல்வி செயற்பாடுகளுக்காக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்போது 2023ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.