ஐரோப்பிய நாடுகளில் குடியேற போலி திருமணங்கள் செய்தவர்களுக்க நேர்ந்த கதி

போலி திருமணங்கள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சட்டவிரோதமாக ஆட்களை குடியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழுவை ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் உட்பட 15 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் லத்வியா, நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பெண்களை வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து இவ்வாறு ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதுடன் திருமணம் செய்ய மறுப்பவர்களை இவர்கள் கட்டாயப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் விமானப் பயணச்சீட்டு கொள்வனவு செய்தல், போலி கடவுச்சீட்டு உட்பட தேவையான ஏனைய ஆவணங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவ்வாறு 133 போலி திருமணங்களை செய்து வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.