
மட்டக்களப்பில் பாடசாலை மதிலை துவம்சம் செய்த காட்டுயானை
மட்டக்களப்பில் தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தின் சுற்று மதிலின் ஒரு பகுதியை வெள்ளிக்கிழமை இரவு உடைத்து துவம்சம் செய்து விட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் குறித்த பாடசாலையில் பாதுகாப்பு வேலிகள் மாத்திரம் இடப்பட்டிருந்த நிலையில் அதிபர் ஆசிரியர்களினதும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரதும் முயற்சிகளின் பலனாக அப்பாடசாலைக்கு ஒருபக்க மதில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதன் ஒருபகுதியை இவ்வாறு காட்டு யானை உடைத்து துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
