
கஞ்சாவுடன் ஒருவர் கைது
பூநகரி – பள்ளிக்குடாவில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்குடா பகுதியை சேர்ந்த 43 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது கேரள கஞ்சா 2 கிலோ 100 கிராமுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
