10 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்

பதுளையில் நேற்று வெள்ளிக்கிழமை போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

எந்தேரமுல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அப்புகேவத்த பகுதியிலே மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பின் போது ப்ரீகெப் போதை மாத்திரைகள் வைத்திருந்தவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 10 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய 192,000 ப்ரீகெப் (PREGAB) 150 எம்.ஜி வகை போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிகவிசாரணைகளின் பின் நீதி மன்றில் ஆஜர்படத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.