அமெரிக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வருகை தந்திருந்த 25 வயதுடைய அமெரிக்கப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பெண்ணிடம் இருந்து சுமார் 6,000 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க நகைகளையும் திருடிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றுலா வழிகாட்டி உட்பட சந்தேக நபர்களை கைது செய்தனர்.

ஜனவரி 29 ஆம் திகதி கண்டியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பெண் அளித்த புகாரின்படி, 29 ஆம் திகதி இரவு சந்தேக நபர்களுடன் மது அருந்தியதாகவும், இவர்கள் போதைப் பொருள் கொடுத்து மயக்கமடைந்ததாகவும், தான் சுயநினைவு திரும்பியதும், படுக்கையில் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்ததாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

2,400 அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்க வளையல், 3,600 டாலர் மதிப்புள்ள நெக்லஸ் மற்றும் ஒரு ஜோடி வைரம் பதித்த காதணிகள் ஆகியவை திருடப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.