
பிரபல மொடல் அழகி புற்றுநோயால் உயிரிழப்பு
பாலிவுட் நடிகரும், மொடலுமான பூனம் பாண்டே தனது 32வது வயதில் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அறிக்கை அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முகநூலில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட பாண்டேயின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளது “ நேற்று வெள்ளிக்கிழமை காலை எங்களுக்கு கடினமான ஒன்று” என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
“கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது” எனவும் குறித்த இடுகையில் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை பாண்டேயின் மேலாளர் நிகிதா சர்மா தொலைக்காட்சிக்கு ஒன்றிக்கு அளித்த அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
“அன்பான நடிகையும் சமூக ஊடக ஆளுமையுமான பூனம் பாண்டே, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் நேற்றுக் காலை பரிதாபமாக காலமானார், இது பொழுதுபோக்குத் துறையை அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது” என்று சர்மா மேலும் தெரிவித்துள்ளார்.
