
கிளிநொச்சி : ரயிலில் மோதி குடும்பஸ்தர் மரணம் – வீடியோ , படங்கள் இணைப்பு
கிளிநொச்சி டிப்போ வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான சிவராசமுத்தையா சசிவதனன் (வயது – 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


