
மாடியிலிருந்து வீழ்ந்து பாடசாலை மாணவன் உயிரிழப்பு
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த மாணவன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கல்பொத்தவத்தை ஹிந்தகொல்ல திகம்பிட்டிய வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் 14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
இவர் தனது நண்பர்கள் நால்வருடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீதான விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
