இரண்டு குழந்தைகளை மாடியிலிருந்து வீசி கொன்ற தம்பதியினருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

இரண்டு குழந்தைகளை தொடர்மாடி குடியிருப்பின் 15 ஆவது மாடியிலிருந்து கீழே எறிந்து கொலை செய்த சீன தம்பதியினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்கள் இருவரும் புதிய குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கும் நோக்கில் குழந்தைகளை ஜன்னல் வழியாக வீசி எறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த இருவருக்கும் சீனாவின் உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த இருவரும் மரண ஊசி மூலம் தண்டிக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.