
தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பான அறிவித்தல்
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையில் 3 மில்லியன் சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே தொழிலாளர் சட்டத்தின் கீழ் உள்ளதாக தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவில் இருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க தொழில் அமைச்சு அதிகாரிகள் முன்மொழிவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயில் இருந்து 1700 ரூபாவாக அதிகரிக்க தொழில் அமைச்சு முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
