அறநெறிப்பாடசாலை ஆசிரியருக்கான பாடத்திட்டம் தொடர்பான கருத்தரங்கு

-காரைதீவு நிருபர் சி.கஜானன்-

இந்து சமய கலாசார அலுவலர்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அறநெறிப்பாடசாலை ஆசிரியருக்கான பாடத்திட்டம் தொடர்பான கருத்தரங்கு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் வழிகாட்டலில் கொழும்பு, கம்பஹா அறநெறி ப்பாடசாலை ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டம் தொடர்பான கருத்தரங்கானது திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் தலைமையில் கொழும்பு கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றதுடன் வளவாளராக அம்பாறை மாவட்ட செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான பாடத்திட்ட நூல்கள் வழங்கப்பட்டன.