சுவிட்சர்லாந்தில் போலி கட்டணங்கள் (பில்) : சுவிஸ் குற்றத்தடுப்பு அலுவலகம் எச்சரிக்கை
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான கட்டணங்களுக்கான நியாயமான வருடார்ந்த கட்டங்களுக்கு ஈடாக குழப்பமடையாத வகையில் இது தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் குற்றத்தடுப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான கட்டணங்களுக்கான நிறுவனம் செராஃப் (Serafe) . ஆனால் போலி பில்கள் சீரபீ (Searfe) என குறிக்கப்பட்டுள்ளன – ஒரு எழுத்தை மாற்றியுள்ள நிலையில் தவறுதலாக அச்சிடப்பட்டிருப்பதைக் கவனிப்பது சாதாரண மக்களுக்கு எளிதல்ல என்று குற்றத் தடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயங்கள் குறித்தும் , ஏனைய கட்டணங்கள் குறித்தும் கவனம் செலுத்துமாறும், சந்தேகத்திற்கிடமான கட்டணங்கள் (பில்) கிடைத்தாலோ அல்லது ஏற்கனவே செலுத்தியிருந்தாலோ, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.