கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் படுகாயம்

கிளிநொச்சியில் கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் படுகாயமடைந்துள்ளார்.

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய  பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கோரமோட்டை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த தருமபுரம் பொலிஸார் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார்.

இதன்போது அவரை கைது செய்யும் நோக்கில் துரத்திச் சென்ற வேளை மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுதுவக்கு வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர்படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.