
போதைப்பொருட்களுடன் ரண் பெட்டா கைது
வெளிநாட்டில் உள்ள “அம்பலங்கொடை சமன்கொலுவா ” வின் நெருங்கிய சகா சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் புஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின், 16 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
