நிகழ்நிலை காப்பு சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், இன்று முதல் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நடைமுறைக்கு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கு எதிராக பலதரப்பட்டோராலும் எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்ட வண்ணம் இருந்துள்ள நிலையில், இரண்டு நாள் விவாதத்திற்குப் பிறகு சபையில் வாக்கெடுப்பு இல்லாமல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் போது எதிர்க்கட்சிகள் கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகக் கூறி கடுமையான வாக்குவாதங்களையும் ஆரம்பித்திருந்தன.இவ்வாறு, இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் சபாநாயகரால் இன்று கையெழுத்திட்டுள்ளது.