
ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 10 ஆண்டு நிறைவு
-ஏறாவூர் நிருபர்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 10 ஆண்டு நிறைவை முன்னிட்டும் 2023ஆம் ஆண்டு மெய்வல்லுனர் போட்டியில் வெற்றிகளை பெற்ற மாணவர்களையும் 5ஆம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் பிரதேச கலாச்சார போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு, இன்று புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர்.ஆ.ஆ.ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாடசாலை ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பனிமனையின் பணிப்பாளர் அமீர் கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வின் போது பிரதம அதிதிக்கான கௌரவிப்பு மற்றும் கௌரவ அதிதிக்கான கௌரவிப்பு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து கலை நிகழ்ச்சிகளும் நிகழ்வை அலங்ககரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.







