சமரசம் பேச தமிழரசுக்கட்சியின் தலைவர் மட்டக்களப்பிற்கு வருகிறாரா?

இலங்கை தமிரைசுக்கட்சியின் தலைவர் சிறிதரன் மட்டக்களப்ப்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தமிழரசுகட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக்கட்சியின் தலைவராக புதிதாக தெரிவு செய்யப்பட்ட சிறிதரன் மட்டக்களப்பு உறுப்பினர் ஒருவருக்கு செயலாளர் பதவியை வழங்குவதாக தெரிவித்துவிட்டு கொடுத்த வாக்கை மறந்து திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர் குகதாசனுக்கு செயலாளர் பதவியை வழங்கியுள்ளார் என்று ஒருசாரார் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியினுள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் ஆகியோருக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணமாகவும் இந்த செயலாளர் பதவியே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிளவுபட்டுள்ள தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களை ஒன்றிணைக்க சமாதானம் பேச சிறிதரன் மட்டக்களப்பிற்கு வருகிறாரா? என்ற ஒரு கேள்வி பலதரப்பினரிடையே இருந்து விமர்சனமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செயலாளர் பதவியை கொடுக்காமல் விட்டதற்கு விளக்கம் கொடுக்க வருகிறாரா என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.