
உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இருந்து சடலம் மீட்பு
-பதுளை நிருபர்-
கிராதுருகொட்ட உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இன்று புதன்கிழமை நபர் ஒருவரின் சடலம் நீரில் மிதந்ததாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்த்தேக்கத்தின் சிறிபால கெட்டாய என்ற பகுதியில் உயிரிழந்த நபரின் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் அமைய குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
