சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 7ஆம் திகதி வருடாந்த அவசரகால எச்சரிக்கை மணி சோதனை

சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 7ஆம் திகதி வருடாந்த அவசரகால எச்சரிக்கை மணி (சைரன்) சோதனை நடைபெறவுள்ளதால் இதுகுறித்து மக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை எனவும், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த சோதனை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது எச்சரிக்கை சமிக்ஞை நண்பகல் 1:30 மணிக்கு ஒலிக்கப்படும் இது ஒரு நிமிடம் வரை நீடிக்கும். தேவைப்பட்டால் எச்சரிக்கை சமிக்ஞை சோதனையை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நீர் அணைகளுக்கு அருகாமை உள்ள மக்களுக்கான நீர் எச்சரிக்கை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதிக்கப்படும். இது 10 வினாடிகள் இடைவெளியில் ஒவ்வொன்றும் 20 வினாடிகள் கொண்ட பன்னிரண்டு முறை ஒலிக்கும்.

லிச்சென்ஸ்டைன் மற்றும் சுவிட்சர்லாந்தில் எச்சரிக்கை சோதனைகள் எப்போதும் பிப்ரவரி முதல் புதன்கிழமை நடைபெறும். எச்சரிக்கை இல்லாமல் சைரன் ஒலித்தால், அது உண்மையான எச்சரிக்கையாகவும் இது வரவிருக்கும் ஆபத்தின் அறிகுறியாகும்.

சிவில் பாதுகாப்புக்கான பெடரல் அலுவலகத்தின் செயலி (App) இலவசமாகக் கிடைக்கிறது. இது அசுத்தமான குடிநீர் அல்லது காட்டுத் தீ போன்ற சிறிய அளவிலான நிகழ்வுகள் குறித்து மக்களை எச்சரிக்கிறது மற்றும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளையும் வழங்குகிறது.