மீன் பிடிக்க சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்தில் காணாமல் போன குடும்பஸ்தர் இன்று செவ்வாய் கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை மீன் பிடிக்க சென்ற நிலையில் காணாமல் போய் இன்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் மாயம்