
காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தனியார்துறையிடம் கையளிப்பு
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளை தனியார்துறைக்கு போட்டி அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 6 காற்றாலைகளை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதெனினும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு காரணமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
