
புலனாய்வு பிரிவினரால் ஆயுதங்கள் மீட்பு
களுத்துறையில் ஆயுதங்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தெல்கொட பகுதியை சேர்ந்த குனெட்டி ரவி ஜானக சில்வா (வயது – 46) மற்றும் லஹிரு மதுசங்க பெரேரா (வயது – 29) என்போரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் தகராறு காரணமாக, மற்றைய தரப்பைச் சேர்ந்த ஒருவரைக் கொல்லும் நோக்கில் இந்த ஆயுதங்கள் தம்வசம் வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
