
பெற்றோர் சண்டையால் பாடசாலை மாணவி விபரீத முடிவு
பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
புவக்கொடமுல்ல பிரதேசத்தை சேர்ந்த16 வயதுடைய தரம் 11 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவி இதன்போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
குறித்த சிறுமி தனது மேலதிக வகுப்புகளுக்கு பெற்றோரிடம் பணம் கோரிய நிலையில் இது தொடர்பில் தாய் மற்றும் தந்தைக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பெற்றோரின் தகராறில் மன உளைச்சலுக்குள்ளான மாணவி, அதிகளவிலான மருந்துகளை உட்கொண்டுள்ளார்.
இதனால் திடீரென சுகயீனமடைந்த மகளை அவரது தந்தை பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.மகளை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இரத்த அழுத்த மருந்துகளை அதிகளவில் உட்கொண்டதால் மரணமடைத்ததாக தெரிவித்துள்ளனர்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
