பெண் ஊழியர் மீது துஷ்பிரயோகம் : நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது

சக பெண் ஊழியர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொலிஸாரால் நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையின் போது குறித்த ஊழியர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டதால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வது போல் ஒரு ஊழியர் ஒருவரை கைது செய்வதற்கு முன் சபாநாயகரின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை தெரிவிக்கப்படுகின்றது.