பகிடிவதை: அதிரடியாக கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள்

பல்கலைக்கழக மாணவியை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மொரவக்க, ருக்கஹவில, அளுத்தரம, இமதுவ மற்றும் கித்தலவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூக விஞ்ஞானம் மற்றும் மொழியியல் கற்கை பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.