
செல்லக்கதிர்காம வீதியில் விபத்து : ஒருவர் மரணம்
கதிர்காமம் – செல்லக் கதிர்காமம் வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வான் லொறியுடன் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகின்றது, இந்த விபத்தில் வானில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
