மாவனல்லை நகரில் பாரிய தீ விபத்து : 30 வர்த்தக நிலையங்கள் சேதம்

மாவனல்லை நகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 30 வர்த்தக நிலையங்கள் தீப்பரவலால் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பழங்கள் மற்றும் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

தீப்பரவலையடுத்துஇ சம்பவ இடத்துக்கு விரைந்த மாவனல்லை நகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் பொதுமக்களும் இணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.