பொதுஜன பெரமுன உறுப்பினர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்

பொதுஜன பெரமுனவின் மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினரை தலைக்கவசத்தால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் இன்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தகெட்டிய, பதுலுஓயா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை தபகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மஹியங்கனை உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரே இவ்வாறு தாக்கப்பட்டு கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருவருக்குமிடையில் வாக்குவாதம் மூண்டதையடுத்து சந்தேக நபர் குறித்த உறுப்பினரின் தலையில் தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.