
வாகன விபத்தில் 17 வயது சிறுவன் மரணம்
பொலன்னறுவையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
தம்பாளை வேப்பம் புரயில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
தம்பாளை – றிபாய் புர உள்ளக காபர்ட் வீதியில் நேற்று குறித்த சிறுவன் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளார்.
