உலகிலேயே அதிக அரச ஊழியர்களைக் கொண்ட நாடு இலங்கை: சுகாதார அமைச்சர்

நாட்டில் அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் உலகிலேயே அதிகளவான அரச ஊழியர்களைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முழு அரச சேவையிலும் பாதி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.