
ரயிலில் மோதி மாணவன் படுகாயம்
காலி ரயில் பாதையில் நண்பர்கள் குழுவுடன் அமர்ந்திருந்த மாணவன் ரயில் மோதியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூஸா வெல்லபட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளார்.
பூஸா ரயில் நிலையத்துக்கு அருகில் தனது நண்பர்கள் ஆறு பேருடன் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது காலியிலிருந்து அளுத்கம நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதியே இவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
