
மனைவியின் இழப்பை தாங்க முடியாத கணவன் எடுத்த தவறான முடிவு
விபத்தில் மனைவி உயிரிழந்த சோகத்தை தாங்கமுடியாத கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக்கொள்வதற்காக நஞ்சை அருந்தியுள்ளார்.
இங்கிரிய பிரதேசத்தில் கடந்த 20ஆம் திகதி இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கணவன் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளார். எனினும் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய மனைவியே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தனது மனைவி உயிரிழந்த சோகத்தில் இருந்த கணவன் உயிரை மாயத்துக்கொள்வதற்காக நஞ்சருந்தியுள்ளார்.
அதன் பின்னர், அந்த நபர் உறவினர்களால் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
