
ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கடத்தி வந்த பெண் கைது
டுபாயில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மருதானை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வணிக நோக்கத்திற்காக தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
