சம்மாந்துறை கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கிகள் வழங்கி வைப்பு

 

“Free for Education” திட்டத்தின் ஊடாக சம்மாந்துறை மற்றும் அதன் அண்மித்த பிரதேசங்களில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் முதற் கட்டமாக அண்மையில் சம்மாந்துறை அல்-அர்ஷத் மஹா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) இவ்வாண்டு தரம் 05 பரீட்சையில் சித்தியடைந்த வலது குறைந்த பாடசாலை மாணவர்களுக்கும், ஆரம்ப கல்வி மாணவர்களுக்கும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்ட நிகழ்வாக சம்மாந்துறையில் உள்ள பிரபலமான பாடசாலையான கமு/சது/ சிறீ கோரக்கல் தமிழ் மஹா வித்தியாலத்திற்கு கல்விப் பொது தராதர உயர்தர  மாணவர்களுக்கு கடந்த கால வினாத்தாள்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கி வைக்கபட்டது,

கமு/சது/கஸ்ஸாலி வித்தியாலத்திற்கு தேவையாகக் காணப்பட்ட “ஒலிபெருக்கிகள்” பாடசாலை நிர்வாகத்திடம்  நேற்று வெள்ளிக்கிழமை  கையளிக்கப்பட்டது.

பாடசாலைகளையும், மாணவர்களை தொடர்ச்சியாக ஊக்குவித்து வரும் “Free for Education” திட்டத்தின் மூன்றாவது திட்டம் இதுவாகும்.