
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்பு கூட்டம்
-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-
சம்மாந்துறை தைக்காப்பள்ளி வட்டாரத்தில் சம்மாந்துறை – 1 கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனர்நிர்மானம கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், அரசியல் அதிஉயர்பீட உறுப்பினர் ஏ.எம்.ஏ.அஸீஸ், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் சம்மாந்துறை, தைக்காப்பள்ளி வட்டார வேட்பாளர் அர்ஷத் இஸ்மாயில் மற்றும் கட்சிப்பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.






