
மின்சார வேலியில் சிக்குண்டு யானை உயிரிழப்பு
தெஹிவளை பகுதியில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை காட்டு யானை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
8 அடி உயரமும் 30 வயது மதிக்கதக்க காட்டு யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலுக் கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்குண்டே குறித்த யானை உயிரிழந்துள்ளதுடன் காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த யானைக்கு நிகவரெட்டிய மிருக சிகிச்சைப் பிரிவின் வைத்தியரினால் நாளை பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக நிகாவரெட்டிய வனஜீவராசிகல் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
