
இசைஞானியின் இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டது
இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில் தற்போது குறித்த நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் மரணித்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்படுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி மீண்டும் நடத்தப்படவுள்ள திகதி இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படுமென ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
