மூடநம்பிக்கையினால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கை நீரில் குளித்தால் புற்றுநோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையினால் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் வைத்தியர்கள் கைவிட்டதால் சிறுவனின் பெற்றோர் அவரை கங்கைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெற்றோர் தனது மகனை கங்கை நீரில் குளிக்க வைத்தால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில் சிறுவனை மூழ்கடித்துள்ளனர்.

இதன்போது கங்கையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.