
யாழில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது : மற்றொருவர் தப்பியோட்டம்
-யாழ் நிருபர்-
பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
இருவர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார்.
அதன்பின் பொருட்களுக்கான பணத்தை செலுத்த முற்பட்ட சமயம் அவர்களுடைய சந்தேகத்திற்கிடமான நடத்தையால் விசாரணை செய்ய முற்பட்ட வேளை அவர்கள் இருவரில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்
இந்நிலையில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரான பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபர், தான் பாகிஸ்தான் நாட்டில் இருந்து இலங்கை வந்ததாகவும் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடிய பாகிஸ்தான் பிரஜை தொடர்பில் இன்னும் தகவல் வெளியாகவில்லை.
யாழ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
