அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக எதிர்காலத்தில் அனுர குமார திஸநாயக்க வருவார் என்ற அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடாத்த பின்னிற்கின்றது, என தேசிய தொழில் சங்க சம்மேளனத்தின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினருமாகிய கே.டி லால் காந்த தெரிவித்துள்ளார்

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் ஏற்பாட்டில் இடம்பெறும் 2024 ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட மீனவர் மாநாடு சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.