வைரலாகும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதி புகைப்படம்

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை இரவு சனத் நிஷாந்த  பண்டாரவத்தை – சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே வாகன விபத்தில் உயிரிழந்தார்.

திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளதுடன், புகைப்படம் எடுத்தவர் தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.