
நாபிர் பவுண்டேஷன் ஏற்பாட்டில் கல்முனையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
-செந்நெல் கிராம நிருபர் சிஜாஸ்-
கல்முனை பிரதேசத்திற்கு உட்பட்ட வசதி குறைந்த குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பொறியியலாளர் உதுமான்கண்டு நபீரின் ஆலோசனையின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் உதுமான் கண்டு நாபீரின் மாவட்ட இணைப்பாளர் பாசக் கவி பாயிஸ் கரீம் கலந்து சிறப்பித்ததோடு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்
இதன் தொடர்ச்சியாக மற்றுமொரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


