சனத் நிஷாந்த உயிரிழப்பு : கொள்கலன் சாரதி கைது

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் கொள்கலன் ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸ்  பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.