
இலங்கையை வந்தடைந்தார் இசைஞானி
பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா நேற்று புதன்கிழமை மாலை நாட்டை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நேற்று மாலை நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள மாபெரும் இசைநிகழ்ச்சிக்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
